சிவகாசி: அடிதடி வழக்கில் வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் கழிவுநீர் செல்லும் பிரச்சனை தொடர்பாக உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் அடிதடி சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து மாரனேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆனையூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் குமார் (21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி