விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது.சிவகாசி அடுத்த சாட்சியாபுரம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சிவகுமார் (43). இவர் சிவகாசி விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். மேலும் இவர் திரும்பி வரும்போது ஆயில் மில் காலனியை சேர்ந்த மோதிலால் (34), அதை திருடியிருந்தார். இது தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் மோதிலாலை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.