சிவகாசி: உலக நன்மைக்காக பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உலக நன்மைக்காகவும், தொழில்களின் வளம் பெருகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் சுமார் 300 பெண்கள் பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து, கிடாவெட்டி அம்மனுக்குப் படையலிட்டு வழிபாடு செய்தனர். மேள தாளத்துடன் ஊர்வலமாகச் சென்று, பின்னர் வரிசையாக பொங்கல் வைத்து குலவையிட்டு அம்மனை வழிபட்டனர். சிவகாசியில் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக இணைந்து பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. ஜாதி பாகுபாடின்றி பல தலைமுறையாக இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி