சிவகாசி அருகே கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு செய்தார். அப்போது, நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்மணி, 150க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆவேசமடைந்து, அரசு அதிகாரிகள் சும்மா இருக்கிறார்களா என கேள்வி எழுப்பி, முதியவர் ஒருவரின் மனுவைப் பறித்து தூக்கி வீசி, மனு அளிப்பதால் பயனில்லை என ஆட்சியர் முன்னிலையில் ஆக்ரோஷமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.