சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியைச் சேர்ந்த மாயன் என்ற இளைஞர் கடந்த ஆண்டு இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பாரில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது குடும்பத்தினர் ஒட்டியுள்ள நினைவஞ்சலி போஸ்டரில், 'நண்பர்களுக்காக வாழ்ந்து, நண்பர்களுக்காக சீரழிந்து, நண்பர்களுக்காக எங்களை விட்டுச் சென்றாய். கூடா நட்பு கேடாய் முடிந்ததை எண்ணி வாடும் உனது அம்மா, அப்பாவுடன் மகள்' என ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.