விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கலில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 89வது குருபூஜை விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில், திருத்தங்கலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.