சிவகாசி: திமுக ஆட்சியில் வன் கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு- ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம், திமுக ஆட்சியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளது என சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி. ஸ்காட்லாந்து காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் செயல்பட முடியாத காவல்துறையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளது.

 தமிழகத்தில் பெருகியுள்ள வன்முறை கலாச்சாரத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக நேற்று மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அண்ணாமலை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டியுள்ளனர். கைது செய்து தங்களை சமையலறையில் தங்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு என முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். பேட்டியின் போது அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி