சிவகாசி: ஒரே குடும்பத்தில் 2 சிறுவர்கள் பலி.. முக்கிய வேண்டுகோள்

சிவகாசி அருகே நாரணாபுரத்தை சேர்ந்த கவின் குமார்(11), தருண் (8) ஆகிய பள்ளிச் சிறுவர்கள், தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்று ஊரணியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சகோதரர் முறை கொண்ட சிறுவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற நிலையில் இதுபோன்ற குட்டைகள் அதிகளவில் இப்பகுதியில் இருப்பதால் அடிக்கடி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. எனவே, குட்டைகளை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி