சிவகாசி: குண்டர் சட்டத்தில் இரண்டு பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் இரயில்வே நிலையத்தில் இரயில் பயணிகளை தாக்கி அலைபேசி மற்றும் பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் 21, கண்ணன் 20, சோணமுத்து 21 ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் முத்துக்குமார், கண்ணன் ஆகிய இருவர் மீது ஏற்கனவே பல குற்றவழக்குகள் சிவகாசி மற்றும் திருத்தங்கல் காவல் நிலையத்தில் உள்ள நிலையில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் எஸ்.பி. கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்அடிப்படையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஜெயரிலன் உத்தரவிட்டார்.

 இதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் பல வழக்குகள் பதிவு செய்திருந்தாலும், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததது இதுவே முதல் முறையாகும் என இருப்புப்பாதை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி