சிவகாசி: இருதரப்பினர் மோதல்... காவலருக்கு கத்திக்குத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஜூன் - 12 நேற்று இரவு இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதையறிந்த ஒரு தரப்பை சேர்ந்த முருகனின் சகோதரியின் கணவரான திருத்தங்கல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் விஜயன் அங்கு வந்து முத்துலட்சுமியையும் அவரது கணவரையும் லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். பதிலுக்கு எதிர் தரப்பினரும் காவலர் விஜயன் மீது கத்தி, கம்பி மற்றும் கட்டையால் போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதில் காவலர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருதரப்பைச் சேர்ந்த 5 பேர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி