விருதுநகர்: வாலிபர் வெட்டிக் கொலை; மேலும் 2 பேர் கைது

சிவகாசி அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. போலீஸார் அதிரடி நடவடிக்கை. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் தொழிலாளி சுரேஷ் வயது 27 கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்களில் குணசேகரன் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சுரேஷ் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்டார். 

இதை அடுத்து குணசேகரின் தம்பி மதனகோபால் 25, சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு மதனகோபால், மற்றும் அவரது நண்பர்களான சூரிய பிரகாஷ் 19, தனசேகரன் 24, அருண்குமார், முத்துபாண்டி ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து சுரேஷ் வீட்டிற்கு சென்று அவரை வெளியே அழைத்து கொலை செய்தனர். 

மேலும் இந்த கொலை தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மதனகோபால், சூரிய பிரகாஷ், தனசேகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மூவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மேலும் இருவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த திருத்தங்கள் சரஸ்வதி நகர் முத்துபாண்டி 24, ஆலாவூரணி அருண்குமார் 27 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி