விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பூவநாதபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த ராம்குமார் (27) மற்றும் ரிசர்வ்லைன் நேருஜி நகரைச் சேர்ந்த ஞானப் பிரகாசம் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.