விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ராபியம்மாள் மற்றும் போலீசார் முத்தமிழ்புரம் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செல்வம் (50) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமாரியப்பன் மற்றும் போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குருசாமி (30) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமும் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.