சிவகாசி: திமுகவில் வேலை செய்ய யாரும் இல்லை; ராஜேந்திரபாலாஜி

அதிமுகவை போல திமுகவில் வேலை செய்ய ஆட்கள் யாரும் இல்லை, திமுகவை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவை விட திமுகவினர் வேகமாக உள்ளனர் என்று சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக பாகச் செயலாளர்கள், பாகப் பொறுப்பாளர்களை புதிய நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. 

இதில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார். பின்னர் பேசிய கே.டி. ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை போல திமுகவில் வேலை செய்ய ஆட்கள் யாரும் இல்லை, 

திமுகவை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவை விட திமுகவினர் வேகமாக உள்ளனர், அதிமுக நிர்வாகிகள் போல் திமுகவினர் களப்பணியாற்ற முடியாது, இளைஞர்கள் அதிகளவில் அதிமுகவிற்கு வந்து கொண்டே உள்ளனர், வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தாலே அதிமுகவில் கூட்டத்தை கூட்ட முடியும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 100% வெற்றியுடன் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு முதலமைச்சராவது உறுதி என்றார். கூட்டத்திற்கு ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி