இச்சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறும் சிவகாசி அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் நடைபெறும் மூன்றாவது திருட்டு சம்பவம் இதுவாகும்.
முன்னதாக ஒரு முறை கணினி சாதனங்களும், மற்றொரு முறை 10க்கும் மேற்பட்ட பேட்டரிகள் திருடப்பட்ட நிலையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.