விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிவன் கோவில் அருகில் உள்ள பிளாஸ்டிக் கடை உரிமையாளர் காதர் இஸ்மாயில் என்பவரின் கடையில் இருந்து ₹1 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. இரவில் கடையில் தங்கியிருந்த ஊழியர் காதர் அயர்ந்து தூங்கிவிட்டதாகவும், பணம் எப்படி மாயமானது என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.