இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் பங்கேற்க, அரசு மேய்ச்சல் நிலமான 10 ஏக்கரில் 210 வகையான 40 ஆயிரம் மரக்கன்றுகள் மாணவ, மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடப்பட்டது.
பருவ மழை மேக கூட்டங்களை ஈர்க்கும் பகுதியான வேண்டுராயபுரம் கிராமம், மேலும் நீர்வரத்து பகுதியாயுள்ளதால் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், மரம் வளர்ப்போம்- மனம் மகிழ்வோம், மழை பெறுவோம். கானுயிர் காக்க- கானகம் வளர்ப்போம். எதிர்கால பசுமை தமிழகத்தை உருவாக்குவோம் என சபதமெடுத்து, நடவு மற்றும் பராமரிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக கூறினர்.
40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலப்பரப்பில் 3 ஆயிரத்து 510 அடி நீளம், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. 6 ஆயிரத்து 800 அடி நீளத்திற்கு பாசன குழாய்களுடன், 9 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சொட்டுநீர் பாசன வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.