சிவகாசி: தூய்மை பணியாளர்களை கௌரவித்த.. மாநகராட்சி ஆணையாளர்

சிவகாசி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு விழா. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மாநகராட்சி ஆணையாளர் சரவணன் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 48 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தினசரி நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என அனைத்து வீடுகளிலும் தரம்பிரித்து தூய்மைபணியாளர்கள் மூலம் குப்பைகள் வாங்கப்பட்டு வருகிறது. மக்கும் கழிவுகள் 8 நுண் உரக்குடில் மையங்களில் இயற்கை நுண் உரமாக தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடியவை, மறுசுழற்சி செய்ய முடியாதவை என தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்காத நெகிழி பைகள் மாதந்தோறும் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்கும், மக்காத குப்பை என வீடுகளிலிருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை சிறப்பான முறையில் தரம்பிரித்து பணியாற்றிய தூய்மை பணியாளர்களை மாநகராட்சி ஆணையாளர் சரவணன் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி