சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில் தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளி இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, "மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள், மூத்தவள் முதன்மையானவள்!" என்று வலியுறுத்தியுள்ளார்.