விருதுநகர்: சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் 'ஆனி பிரம்மோற்சவம்' திருவிழாவின் 1ஆம் திருவிழா சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா. சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மிகப் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் 'ஆனி பிரம்மோற்சவம்' திருவிழா கோலாகலமாக நடைபெறும். 

இந்தாண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா நேற்று ஜூலை 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கருட கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்று வருகிறது. 1ஆம் திருவிழாவான நேற்று இரவு சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் மேளதாளம் மற்றும் பெண்கள் கோலாட்டத்துடன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் ஜூலை 12ஆம் தேதி (சனிக்கிழமை) காலை, ஆனி பிரம்மோற்சவத் தேரோட்டம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி