இந்தநிலையில் மாதவன் நிறுவனத்தின் அருகில் இருந்த தேன் கூட்டை சிலர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது தேன் கூட்டை எரிக்க பயன்படுத்திய தீப்பந்தத்தை அணைக்காமல் மாடியில் வீசிவிட்டு சென்றதாலும், மாடியில் காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த அட்டை கழிவுகள் எரிய தொடங்கியது. இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.