அப்போது மாரனேரி போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட புலிப்பாறைப்பட்டி கொங்கள்குளம் ரோட்டில் உள்ள அரசுக்குச் சொந்தமான கண்மாய் பகுதியில் சிலர் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக அதிகாலை 2 மணிக்கு சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது குருமூர்த்தி (39) என்பவர் தலைமையில் 3 பேர் மணல் அள்ளும் எந்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். மேலும் மண் அள்ளும் எந்திரத்தில் அமர்ந்திருந்த குருமூர்த்தி மட்டும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அவரைப் பிடித்து மாரனேரி போலீசார் அவரை கைது செய்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்