விருதுநகர்: பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளியில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு. சிவகாசியின் மையப் பகுதியில் இயங்கி வரும் மிகவும் பிரபலமான காரணேசன் பெண் மேல்நிலைப்பள்ளியில் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயின்று வருபவர் மாணவி ஹரணி (17), இவர் வழக்கம்போல் ஜூன்-11 நேற்று வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அவரை மீட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே இருதயப் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அதே பள்ளியில் இறந்த பள்ளி மாணவியின் தாயார் தேவி அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்குக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி