விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர திமுக சார்பில் செயலாளர் உதயசூரியன் ஏற்பாட்டில், மேயர் சங்கீதா தலைமையில் நேற்று பிப்ரவரி 8 நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசினார்: - ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்த இடைத்தேர்தல் வெற்றி வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலின் திமுகவுக்கான எடைத்தேர்தல். திமுகவுக்கு எதிராக கூச்சலிட்டவர்கள் தேர்தலில் போட்டியிடாமல், எதிர்த்து நிற்காமல் ஓடி ஒளிந்து விட்டனர். இதே வரலாறு மீண்டும் 2026-ம் ஆண்டு தேர்தலில் திரும்பும். உதயசூரியன் சின்னத்தில் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்து மீண்டும் மு.க. ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவார்கள்.
இந்தியாவின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் விளங்கி, எண்ணற்ற திட்டங்களை தீட்டி கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடைய செயல்பட்டு வருகிறார் என்றார். பொதுக்கூட்டத்திற்கு திமுகவை சேர்ந்த பல்வேறு அணியின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.