விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று ஏப். 14 சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரவு கனிவர்க்க அம்மன் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, உள்ளிட்ட பழங்களாலும், வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்து ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி