பின்னர் பேட்டியளித்த எம்.பி. மாணிக்கம் தாகூர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாகவோ சந்திரகுமாரின் வெற்றிக்காக பாடுபடுவோம், சீமானும் அண்ணாமலையும் மேட்ச் பிக்ஸ் செய்யும் கேம் விளையாடி வருகிறார்கள், வெளியே இருந்துகொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்,
பெரியாரின் எண்ணங்களையும் சமூகநீதி அரசியலையும் உடைத்தெறிய வேண்டும், சீமான் தமிழக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், கூட்டணிக்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்பதும் நியாயமற்றது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளது, வரவேற்கத்தக்கது என்றார்.