சிவகாசியில், தனியார் கலைக் கல்லூரி அருகே இரு இளைஞர்கள் சாலையில் சண்டையிடுவது போல் நடித்து, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்க வைத்து கேலி செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.