சிவகாசியில் 30 ஆண்டுகால மக்களின் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து, இன்று (நவ. 11) திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை சாட்சியாபுரத்தில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் 700 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலம், மத்திய அரசின் ரூ. 10 கோடி மாநில அரசின் ரூ. 61 கோடி நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்கு முன்பாகவே பணிகள் முடிவடைந்து,விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.