சிவகாசி: பட்டாசு கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையோரம் பட்டாசு கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு. 

சிவகாசியிலிருந்து செங்கமலப்பட்டி செல்லும் சாலையோரமாக சிலர் பட்டாசு கழிவுகள் மற்றும் அச்சக கழிவுகள் ஆகியவற்றை கொட்டி அதனை தீ வைத்து எரிக்கின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது பயங்கர சத்தத்துடன் கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறுவதுடன் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியாகி அப்பகுதி பொதுமக்கள் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். 

எனவே இப்பகுதியில் ஆபத்து நிறைந்த பட்டாசு கழிவுகள் கொட்டுவதை தடுக்க காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி