சிவகாசி: 2025ம் ஆண்டு தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வரும் '2025'ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் தயாராகும் தினசரி காலண்டர்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்படுவதால் காலண்டர்களுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக உள்ளது. வழக்கமான காலண்டர்களுடன் மினி, மெகா கடிகாரத்துடன் கூடிய டை கட்டிங் காலண்டர்கள் என 300க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

வரும் புத்தாண்டின் புதிய வரவாக, தினசரி காலண்டரில் ஒவ்வொரு நாள் தாளிலும் ஒரு 'க்யூஆர் கோடு' அச்சிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் அதில் ஒரு ஊரின் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ள தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கியமான விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர் ஜெய்சங்கர் கூறும்போது, சிவகாசியில் தயாராகும் காலண்டர்கள் தரமானதாகவும், புதுமையாகவும் இருப்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வகைகளில் காலண்டர்கள் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு க்யூஆர் கோடு அச்சிட்ட காலண்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி