சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. திடீரென நள்ளிரவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சிவகாசி நகர், புறநகர், திருத்தங்கல், சசி நகர், சித்துராஜபுரம், செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.