விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் நேற்று ஜூன் 14 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலாளர்களுக்கு ஒன்றிய அளவில் கலந்தாய்வு நடத்தி பணி மாற்றுதல்கள் வழங்க வேண்டும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை மீண்டும் பணியிடங்கள் வழங்க வேண்டும், பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யகுமாரி மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும், பதவி உயர்வின் அடிப்படையில் நிரப்பிட வேண்டிய 5 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 5 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மேலும் பதவி உயர்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.