சிவகாசி: நோட்புக் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

விருதுநகர் மாவட்டம், கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சிவகாசியில் நோட்புக் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு அடுத்தபடியாக அச்சுத் தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வரும் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான நோட்புக் தயாரிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தின் தேவையை மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து நோட்புக்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளதால், ஏற்கனவே ஆர்டர்கள் வழங்கியுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் கடைகளின் விற்பனைக்கும் நோட்புகளை சப்ளை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான அச்சகங்கள் அதன் சார்புத் தொழில் நிறுவனங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்களைக் கொண்டு நோட்புகளின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நோட்புகள் தயாரிக்க தேவையான காகிதம், அட்டை போன்ற மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்து, இதனால் நடப்பாண்டில் விலை வெகுவாக சரிந்ததால் 5 சதவீதம் வரை நோட்புகளின் விலை குறைவாக இருக்குமென்று உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி