சிவகாசி: புதிய காமிக்ஸ் நூலகம் திறப்பு..நிதி அமைச்சர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அறிவுசார் மையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய காமிக்ஸ் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை ஜூன். 6 திறந்து வைத்தார். பின்னர் அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். 

மேலும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் சங்கீதா, துணைமேயர் விக்னேஷ் பிரியா, ஆணையாளர் சரவணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உள்பட ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி