சிவகாசி: மூதாட்டி மர்ம சாவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியின் மனைவி ராஜேஷ்வரி (85). இவரது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. நீண்டநேரமாகத் திறக்காததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருத்தங்கல் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். 

பின்னர் போலீசார் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, உடல் அசைவின்றி மூதாட்டி ராஜேஷ்வரி இறந்துகிடந்தார். இதுகுறித்து திருத்தங்கல் வி.ஏ.ஓ குருபாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் சாவுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி