இந்த தனிப்படை போலீசார் தினமும் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிவகாசி அறிஞர் அண்ணா காலனி சேர்ந்த பொன்னுகாளை மனைவி சண்முகக்கனி (67) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து போலீசார், மூதாட்டி சண்முகக்கனியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சண்முகக்கனி மற்றும் அவரது வீட்டில் இருந்த தனது மருமகள் ராஜலட்சுமி (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிவகாசி பகுதியில் 10 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.