விருதுநகர்: சாலை விபத்தில் மூதாட்டி பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி. சிவகாசி அடுத்துள்ள முருகன் காலனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி ராமாத்தாள் (வயது 85). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் ராமர் (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டியின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ராமாத்தாள் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து ராமாத்தாளின் மகன் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி