விருதுநகர்: சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கியவர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கியவர் கைது.சிவகாசியை அடுத்துள்ள பொன்பாலாஜி நகர் பகுதியில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பட்டாசு கடை அருகில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகள் அடங்கிய 100 பட்டாசு அட்டை பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக பட்டாசுகள் வைத்திருந்ததாக சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மைக்கேல்ராஜ் (வயது 42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி