சிவகாசி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை தாக்கியவர் கைது

சிவகாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தாக்கியதாகக் கூறப்படும் குருநாதன் என்ற கூலித் தொழிலாளியை சிவகாசி டவுன் போலீசார் கைது செய்தனர். காளி ராஜன் (55) என்பவரை சக கூலித் தொழிலாளியான குருநாதன் (38) கிண்டல் செய்ததாகவும், இது தொடர்பாக கேட்டபோது காளி ராஜனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தடுக்க வந்த காளி ராஜனின் மனைவி ராமலட்சுமி மற்றும் மகன் இசக்கிமுத்துவையும் குருநாதன் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி