சிவகாசி: அமைதியான முறையில் வாக்கு சேகரித்த கே. டி. ஆர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் நகர பகுதியான ஆலாவூரணி மற்றும் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். விஸ்வகர்ம நகரில் இரவு 10 மணியளவில் தேர்தல் விதிப்படி ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் இரட்டை விரல்களைக் காண்பித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் வெற்றி விநாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து பொதுமக்களிடம் சால்வை பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி