சிவகாசி: பெண் பட்டாசு தொழிலாளி வீட்டில்.. நகை திருட்டு

சிவகாசி அருகே பெண் பட்டாசு தொழிலாளி வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை திருட்டு. போலீஸார் விசாரணை.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த உள்ள அனுப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது மகளுடன் செல்வி வசித்து வருகின்றார். சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு செல்வி பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைத்து திறந்து நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மூன்றரை பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் செல்வி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் கதவை யாரோ மர்ம நபர் போலியான சாவி போட்டு திறந்து உள்ளே சென்று நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி