சிவகாசியில் நகை, பண மோசடி வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 04.04.2018 அன்று கார்த்தீஸ்வரி, கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகியோர் மீனாட்சி என்பவரிடம் நகை, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றம் ஜெயதீஸ்வரிக்கு 5 ஆண்டுகளும், மற்ற மூவருக்கு தலா 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.