விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆணையூர் பகுதியில் மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சங்கரன்கோவில் வீரிருப்பு பகுதியைச் சேர்ந்த திருமலைகுமார் (54) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.