சிவகாசி: குடும்பத்தகராறில் மனைவி, மாமனாரை தாக்கிய கணவன் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆனையூர் லட்சுமியாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 30), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் விக்டோரியா (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 

இந்த நிலையில் கருப்பசாமி வசித்து வரும் பகுதியில் பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில் தனது பெற்றோருக்கு புது துணி எடுத்து தரும்படி விக்டோரியா தனது கணவனிடம் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கருப்பசாமியை போலீசார் அழைத்து கண்டித்துள்ளனர். 

சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்த கருப்பசாமி, மனைவி விக்டோரியாவிடம் மீண்டும் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் விக்டோரியா தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த மாமனார் ஜெயராமனையும் அவர் தாக்கியுள்ளார். 

இதில் அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விக்டோரியா சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி