சிவகாசி: புனிதலூர்து அன்னை ஆலய பெருவிழா.. ஏரளாமானோர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள புனிதலூர்து அன்னை ஆலயத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழா பிப். 6-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. நவ நாட்களில் சிறப்பு திருப்பலிகள், ஆன்மீக அருளுரைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் லூர்துமாதா எழுந்தருள, நகரின் முக்கிய வீதிகளின் வழியே தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, வாத்திய முழக்கத்தோடு அன்னையை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி