சிவகாசி அருகே ஆனையூர் காந்தி நகரில் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில், மே 23 இரவு இடி, மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இங்கு வசித்த பட்டாசுத் தொழிலாளி மாரியப்பன், இரவில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த நகர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.