இதுகுறித்து மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தினுடைய நிர்வாக இயக்குனர் கவிஞர். திலகபாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் ஒரு மைல்கல்லாக இருதய அறுவை சிகிச்சை என்பது நடத்தப்பட்டுள்ளது.
இருதய அறுவை சிகிச்சை மதுரை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் சென்று செய்ய வேண்டும் என்ற நிலையில் மருத்துவர் மகேந்திரா சேகர் அவர்களின் சீரிய முயற்சியினால் தற்போழுது சிவகாசி மதி மருத்துவமனையில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே முதன்முறையாக மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நோயாளி தற்போது ஆரோக்கியமாக உள்ளார்.