விருதுநகர்: கபடி போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிசுகளை வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். விளையாட்டு போட்டி நடத்துவதற்கும் பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறார். 

இந்த நிகழ்வில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணியம்பட்டி கிராமத்தில் M. P. பாய்ஸ் அணி சார்பாக 2ஆம் ஆண்டு கபாடி போட்டியின் இறுதி போட்டி நேற்று இரவு ஜூன் 1 நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடின. இந்த நிலையில் இறுதி போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கபடி போட்டியை கண்டு ரசித்தார். பின்பு வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி