சிவகாசி: கோயில் திருப்பணிக்கு நிதி அளித்த முன்னாள் அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கோயில்களுக்கு திருப்பணிக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம், கிச்சநாயக்கன்பட்டி கோயில் திருப்பணிக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதி வழங்கினார். சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கம்ம மகாஜன சங்கத்திற்குச் சேர்ந்த ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் தற்போது திருப்பணி நடந்து வருவதால், கிச்சநாயக்கன்பட்டி பொதுமக்களும், கம்ம மகாஜன சங்கத்தில் உள்ள பெரியவர்களும் கோயில் திருப்பணிக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அணுகினர்.

கோயில் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோயில் திருப்பணிக்காக ரூ. 60ஆயிரம் வழங்கினார். நிதியைப் பெற்ற கம்ம மகாஜன சங்கத்தினரும், ஊர் பெரியவர்களும் நன்றி தெரிவித்தனர். இதேபோல் சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சி சரஸ்வதிபாளையம் விநாயகர் கோயில் கட்டுமான பணிகளுக்கு ரூ. 50ஆயிரமும், சிவகாசி ஐயப்பன் கோயில் அருகில் உள்ள ஸ்ரீபால் அய்யனார் கோயில் கட்டுமான பணிகளுக்கு ரூ. 50ஆயிரமும் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி