இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் விதிமீறி பட்டாசு தயாரிக்கப்பட்டன. மேலும் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பென்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. மேலும் தொடர்ந்து பட்டாசு ஆலைக்குள் வெடிவெடித்துக் கொண்டே இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
மேலும் காயமடைந்த கணேசன், ராஜபாண்டி, ராஜசேகர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கமலேஷ் குமார், ராக்கேஷ் ஆகிய மொத்தம் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.